2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தங்க காசுகள் என இரும்பை விற்பனை செய்த ஐவர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட், எம்.சீ.சபூர்தீன்

புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தங்கக் காசுகள் எனக்கூறி தங்கமுலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகளை மன்னார் பகுதி வியாபாரி ஒருவருக்கு வழங்கிவிட்டு ஏழு இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த ஐந்து சந்தேக நபர்களை தந்திரிமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினடிப்படையில் இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநுராதபுரம் நகரம், தந்திரிமலை, நெலும்குளம், மஹவிலச்சி, நாச்சியாதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

விசாரணைகளின் பின் இவர்கள் ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .