2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண்ணின் தங்கச்சங்கிலி பறிமுதல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 05 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

வெருகல் பிரதேச செயலகத்திற்கு அருகில் பாலையத்தாள் வயல் பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்றபோது மேற்படி வழிப்பறி கொள்ளையர்கள் விழுத்திவிட்டுச் சென்ற கையடக்கத் தொலைபேசிகளை கண்டெடுக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தான் வெருகல் வைத்தியசாலையில் மருந்து எடுத்துவிட்டு விநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பும்போதே தனது தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தங்கச்சங்கிலியை  பறிகொடுத்த பெண் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் தன்னைத் தாக்கித் தள்ளிவிட்டு கழுத்திலிருந்த தனது தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.

தனது தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு செல்லும்போது, இவர்கள் இருவரினதும் தொலைபேசிகள் கீழே விழுந்துள்ளன. இந்த தொலைபேசிகளை கண்டெடுத்த தான் ஈச்சிலம்பற்று சந்தியில் உள்ள பொலிஸ் சாவடியிலிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த தொலைபேசிகள் சேருவில பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று சந்திச் சாவடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .