2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரண்

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.மாறன்

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸில் சரணடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

அக்கரைப்பற்று, வெள்ளப்பாதுகாப்பு வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் மற்றைய நபரை கத்தியால் குத்திகொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இச் சம்பவத்தில் அக்கரைப்பற்று 6ஆம் பிரிவு, வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த முகமட் முஸ்தப்பா பகாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையாத கூறப்படும்  பசீர் என்றழைக்கப்படும் ஆப்தீன் தஸ்லீன் என்பவரை பொலிஸார் தேடிவந்த நிலையில் மேற்படி நபர் சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்தில் இன்று மதியம் சரணடைதார் என பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

அக்கரைப்பற்றில் ஒருவர் வெட்டிக்கொலை

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .