2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மடிக் கணினியைத் திருடியவரும் அதனை விலைக்கு வாங்கியவரும் கைது

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் சாலியாபுர பிரதேசத்திலுள்ள ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் வைத்திய பீட மாணவியொருவரின் மடிக் கணினியைத் திருடிச் சென்ற மற்றும் அதனை விலைக்கு வாங்கிய சந்தேக நபர்கள் இருவரை நேற்று அநுராதபுரம்  பொலிஸ் தலைமையக அவசர அழைப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாலியாபுர பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியபீட மாணவி தான் தங்கியிருந்த வீட்டில் மடிக்கணினியை வைத்து விட்டு வைத்தியபீடத்திற்கு சென்ற வேளையில் சந்தேக நபர் அதனைத் திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாலியாபுர பகுதியில் பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது, சந்தேக நபர் மற்றொரு நபருக்கு ரூபா 5000 இற்கு குறித்த மடிக் கணினியை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .