2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

வீடுகளை உடைத்து 14 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

களியாட்ட விடுதிகளில் செலவிடுவதற்காகவே மேற்படி இருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அநுராதபுரம், மதவாச்சி, நொச்சியாகம, மிஹிந்தலை, எப்பாவல ஆகிய பிரதேசங்களின் ஏழு வீடுடைப்பு சம்பவங்களுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகின்றது. 

4 இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .