2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அம்பாறையில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 15 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி தில்லையாற்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

சுமார் 30 வயது மதிக்கத்தக்க  ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற மேலாடை அணிந்தவாறு இச்சடலம் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சடலம் ஆற்றில் 3 தினங்களுக்கு மேல் இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலத்தை பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .