2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சட்ட விரோத மதுபானம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 16 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு பிரதேசத்தில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொத்தான்தீவு – மங்கள எளிய வீதியில் இவ் வடிசாராயம் காய்ச்சுமிடம் இயங்கி வந்துள்ளது.

முந்தல் விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலினையடுத்து முந்தல் பொலிஸாரும் விசேட பிரிவினரும் மேற்பகுதியை சுற்றிவளைத்துள்னனர்.

இதன்போது, 6 பெரல் (பீபா) கோடாவை கைப்பற்றியுள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சின்னப்பாடு பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இதுதொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .