2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 26 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரை இன்று கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தீஸ்வரா கல்லூரியில் கணினி உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப்போயுள்ளன. இந்த நிலையில், இந்தச் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களிமிருந்து திருட்டுப் போனதாகக் கைதுசெய்யப்பட்ட கணினி உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இருவர் தொடர்பிலும் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும்
அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .