2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் கைது

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

6 வீடுகளை பட்டப்பகல் வேளையில் உடைத்து சுமார்  700,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் பொருட்களையும் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் முன்னாள் கொமாண்டோ வீரர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை, அம்பதென்னை ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து  மேற்படி சந்தேக நபர்  தனது சகாக்களுடன் இணைந்து கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்; கொள்ளையடித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் தங்கநகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சந்தேக நபருடன் இணைந்து கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 3 சகாக்களை கைதுசெய்வதற்கான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .