2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சாமிமலை குமரி தோட்டத்தில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஸ்ரீதரன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை குமரி தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

65 வயதுடைய ஆணொருவரின் சடலமே இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்கும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளதாகவும் இந்த நிலையில், தந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .