2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் மற்றும் ஆனமடுவ பிரதேசங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 4 பேரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புத்தளம் - குருநாகல் வீதியில் 2ஆம் மைல் கல் பகுதியில் 3 பேர் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து  தழுவ பிரதேசத்தில் மற்றுமொருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாகவும பொலிஸார் கூறினர்

இவர்களிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, மெகசின், 8 தோட்டாக்கள், கூர்மையான கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .