2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். நீர்வேலி, மசவன் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று  செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.

நீர்வேலி, மசவன் மீனாட்சி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகம்மா (வயது 73) என்பரது  சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கோப்பாய் பொலிஸார், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X