2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புதையல் தேடிய சந்தேகநபர்கள் கைது

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் பல புராதன விஹாரைகளை உடைத்து புதையல் தோண்டிய இரண்டு சந்தேக நபர்களை மாத்தளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மாத்தளை நிகவடுவன புராதன விஹாரை, ஹபுவித புராதன விஹாரை, மகுலேதென்ன ரஜமஹா விஹாரை, வெஹிகலை தர்மராஜ விஹாரை மற்றும் கண்டி பஹல யட்டவர விஹாரை உற்பட பல விஹாரைகளில் தாது கோபுரங்களை உடைத்து இச் சந்தேக நபர்கள் புதையல் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விஹாரைகளில் இருந்து இவர்கள் எடுத்துள்ள புதையற் பொருட்கள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை நடாத்துகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .