2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கினிகத்தேனையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

A.P.Mathan   / 2013 மே 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


கினிக்கத்தேனையில் வைத்து கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று பகல் அதை கொள்வனவு செய்பவர்கள்போல் மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸில் கொண்டு வரப்பட்ட போதை பொருளை கினிகத்தேனையில் வைத்து  கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். இது சுமார் ஒரு கிலோ கிராம் நிறையுடையதாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக கண்டி பகுதியில் இருந்து ஹட்டன் பகுதிகளுக்கு இவர் கஞ்சா போதைப்பொருளை விநியோகம் செய்து வந்துள்ளதாகவும் இவருக்கு இதை பெற்றுக்கொடுப்பவர்கள் தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த ஹட்டன் குற்றத் தடுப்பு புலனாய்வு பொலிஸார், இவரை இன்று சனிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X