2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இராணுவ கேணல் என கூறி பணமோசடி செய்தவர் கைது

A.P.Mathan   / 2013 மே 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் தங்கிய நபர் ஒருவர் 38 ஆயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டிய நிலையில் விடுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வேளையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

கம்பஹா மாவட்டத்தினைச் சேர்ந்த ஹெட்டியாராட்சி (வயது 38) என்பவரே கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இவரது நண்பர்களுடன் கலட்டி பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் 4 நாட்கள் தங்கியுள்ளார்.

விடுதி கட்டணம், உணவு உட்பட குளிர்பானங்கள், மது அருந்திய தொகையாக 38 ஆயிரம் ரூபா விடுதிக்கு செலத்த வேண்டிய நிலையில் விடுதியைவிட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

அதன்போது, விடுதியில் பணியாற்றிய பணியாளர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஒப்படைக்கப்பட்ட இவர், யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தின் விசாரணையின் போது, தான் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் என்று கூறியதுடன், பல்வேறு நபர்களிடம் தான் இராணுவ கேணல் என கூறி பணமோசடி மற்றும் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தலையிட்டு தீர்த்து வைத்ததுடன், பெருமளவிலான பணத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியதாக யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கூறினார்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X