2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைக்குழந்தையுடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2013 மே 05 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலேயே நேற்று சனிக்கிழமை இப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 20,250 மில்லிக்கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இப்பெண் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X