2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மன்னாரில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வேதநாயகன் யூட்சீலன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இச்சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக விடத்தல்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்;.

இவரது மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை விடத்தல்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X