2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மகன் தாக்கியதில் தாய் பலி

Suganthini Ratnam   / 2013 மே 09 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதி பாவாலேனிலேயே இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேற்படி மகன் தனது தாயை வீட்டில் வைத்து தாக்கியும் அடித்தும்  காயப்படுத்தியுள்ளார்.  மகன் அடித்ததில் படுகாயமடைந்த தாயை அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்;.

ஏ.றஹ்மததும்மா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தாயை இவ்வாறு அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X