2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பல்வேறு திருட்டுச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 12 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.சாஜஹான்

பல்வேறு திருட்டுச் செயல்களுடன்  தொடர்புடையதாகக் கருதப்படும் இருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து  30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மடிக்கணினி, செல்லிடத் தொலைபேசிகள், வீடியோ கமெரா, டிஜிட்டல் கமெராக்கள், டொங்கில்கள், தங்க நகைகள் ஆகியவற்றையே நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொச்சிக்கடை, பலகத்துறை பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளை திருடியுள்ளனர்.  மேலும், இந்த சந்தேக நபர்;கள் வீடுகள் மற்றும்  வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கியிருக்கும் விடுதிகள் என்பவற்றிலேயே தங்களது கைவரிசையை அதிகம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள்  போதைப்பொருள் பாவிப்பவர்களெனவும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களெனவும் விபசாரத்தில் ஈடுபாடுடையவர்களெனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஆலோசனையின் பேரில், பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுனில் பெர்னாந்துவின்  மேற்பார்வையில் பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X