2025 ஜூலை 21, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் முதியவர் பலி

Suganthini Ratnam   / 2013 மே 14 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன

65 வயதான ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், அஸறிகம பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே நேற்று திங்கட்கிழமை இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அஸறிகம, முறாளை பகுதியிலுள்ள தனது வயல் காணியை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை சென்ற இவர் இரவாகியும்  வீடு திரும்பாமையால் உறவினர்களும் கிராமவாசிகளும் இவரை தேடிச் சென்றுள்ளனர்.  இதன்போது இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரம் பொலிஸார் கூறினர். 

இந்நபரின் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணையை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X