2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சித்தாண்டியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்து ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்; சித்தாண்டி, விநாயகபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான குணசீலன் பிள்ளையான் (வயது 35) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டினுள்ளிருந்தே இந்த சடலத்தை மீட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வேலைக்குச் செல்வதாகக் கூறி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பகல் வேளையில் வீட்டில் சடலமாகக் காணப்பட்டதாக அவரது மனைவி கூறினார்.

பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீரின் உத்தரவுக்கு அமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X