2025 ஜூலை 21, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2013 மே 22 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

சிலாபத்தின் முனுகுவட்டவான், கீனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்   இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் எம்.ஜீவன் புஷ்பகுமார (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நண்பர் ஒருவருடன் இணைந்து மற்றொரு நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற இந்த இளைஞர் சென்றுள்ளார்.

அங்கு மழை பெய்துகொண்டிருந்த நிலையில் இவர் தனது நண்பர்களுடன் வீட்டு அறை ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இந்த வேளையில் இவர்கள் அமர்ந்திருந்த அறையின் யன்னலின் ஊடாக இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இந்;த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இந்த இளைஞர் சிலாபம்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் சிறிய ரக துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியதாகவும்  அதிலிருந்து வெளியான 2 ரவைகள் உயிரிழந்தவரின் தலையில் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X