2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

Kogilavani   / 2013 மே 23 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.நூர்தீன்

செங்கலடி நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இரட்டை  படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் மே 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்

பிரபல வர்த்தகர் சிவகுரு  மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் தமது வீட்டில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மேற்படி இருவரது இளைய மகளையும் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்களையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பொருட்;களை இரசாயணப் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பியதற்கான அறிக்கையினை ஏறாவூர்ப் பொலிஸார் நீதிமன்றில் நேற்று சமர்ப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X