-எம்.இஸட்.ஷாஜஹான்
வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்த நான்கு கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை இன்று வெள்ளிக்கழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பொலிஸர் தெரிவித்தனர்.
திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரே ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவராவார்.
ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரிடமிருந்து சந்தேக நபர் இந்த கஞ்சாவை வாங்கியுள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
வெசாக் வாரத்தின்போது வெசாக் கொண்டாட்டத்திற்காக வருவோருக்கு தானசாலைகள் மற்றும் பொது இடங்களில் விற்பனை செய்யும் நோக்கில் குறித்த பெண் நான்கு கிராம்களாக கஞ்சாவை பக்கற்றுக்களாக அடைத்து தயாராக வைத்துள்ளார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுனில் பெர்னாந்துவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.