2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரட்டைக்கொலை சந்தேக நபருக்கு பிணை

Kogilavani   / 2013 மே 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கணவன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

நீர்வேலி பகுதியில் மார்க்கண்டு உதயகுமார் (வயது 55) அவருடைய மனைவியான உதயகுமார் வசந்திமாலா (வயது 46) ஆகிய இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சகோதரரான சுவிஸ் நாட்டு பிரஜையை கோப்பாய் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். காணி பிரச்சினை காரணமாகவே இவ்விருவரும்  கொலைச்செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை பொலிஸார் யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த இரட்டைக்கொலை தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் சார்பாக  பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு,  யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவரை 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும்,  2 லட்சம் பெறுமதியான தலா இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல ஆணையாளர் அனுமதித்தார்.

அத்துடன், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 12 மணிவரையான காலப்பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X