2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருக்கோவிலில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 29 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள  வீதியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் 4ஆம் பிரிவு காயத்திரி கிராமத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான (வயது 4) செல்லையா முத்தையா என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் மனைவியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை சண்டையிட்டு விட்டுச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரது மனையும் பிள்ளையும் வீட்டை விட்டு வெளியேறி  உறவினரொருவரின்  வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில்,  வெளியே சென்ற இவர் மதுபோதையில்  வீடு திரும்பியபோது வீடு பூட்டிக் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சடலம் கிடப்பதாக  பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் கூறினர்.

இவருக்கு வலிப்பு நோய் அடிக்கடி வருவதாகவும் மது அருந்துவதுடன்,  மனைவியுடன் சண்டையிடுவதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X