2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொலை சந்தேக நபர் மூவரும் ஆறு வருடங்களின் பின் விடுதலை

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஆயுதத்தினால் தாக்கி ஒருவரை கொலைச்செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவரையும் ஆறு வருடங்களின் பின்னர் யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஊர்காவற்துறை நாரந்தனை மத்தி பகுதியைச் சேர்ந்த சகராஜா சுதர்சன், ஜேசுதாசன் தேவ றொபின்சன், இராசரட்ணம் கிறிஸ்ரி அகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாரந்தனை மத்தி பகுதியைச் சேர்ந்த அந்தோனி ஞானசீலன் (வயது 40) என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி மேற்கண்ட சந்தேகநபர்கள்  அவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளதுடன் ஆயுதத்தினால் தாக்கியும் கொலைச்செய்துள்ளனர். 

கொலை செய்யப்பட்டவர் அவரின் வீட்டிலிருந்து 600 மீற்றர் தொலைவில் உள்ள குளத்தில் வீசப்பட்ட நிலையில் மூன்று தினங்களின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் ஊர்காவற்துறை பொலிஸார் மூவரை  கைதுசெய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை அம்மூவரையும் விளக்கமறியலில் வைககுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் அவ்வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் மாற்றப்பட்டு அங்கு  விசாரணைகள் இடம்பெற்றன.

விசாரணையின் போது, கொலை செய்யததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யூரி சபையின்
முன்னிலையில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று கடந்த 2011 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தனர்.

இதற்கமைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், ஆயுதத்தினால் தாக்கப்பட்டதால் விலா எழும்பு முறிவு காணப்பட்டதாகவும் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  சாட்சியமளித்தவர்கள் கொலை செய்யப்பட்டவர் ; மற்றும் சந்தேக நபர்கள் ஆகியோருக்கு  சார்பானவர்கள் என்ற அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட முடியாதென்றும், சாட்சியங்கள் சூழ்நிலை சாட்சியங்களாக இருப்பதனால் தெளிவான முடிவுக்கு வர முடியாதென்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்நிலையில் குற்றவாளியை இனங்காண்பது ஆபத்தினை விளைவிக்கும் என்ற அடிப்படையிலும், நியாயமான சான்றுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத காரணத்தினால் சந்தேகநபர்களை  நிரபராதிகள் என்று கருதி மூவரையும் விடுதலைச்செய்வதாக யாழ். மேல் நிதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் வ தீர்ப்பளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X