2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

வீதியில் சென்றுகொண்டிருந்த ஒருவரிடமிருந்து  தங்கச்சங்கிலியையும் பணத்தையும் திருடிச்சென்றதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

34 வயதான இளைஞர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பொல்லால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த 26,000 ரூபா பணத்தையும் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் திருடிச்சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், மற்றைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X