2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரட்டைப்படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு, செங்கலடியில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களை மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி விப்ரா ரகு ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி அவர்களது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை தொடர்பில் மேற்படி தம்பதியினரின் இளைய மகள் மற்றும் அவரது காதலன் என கூறப்படும் சிவனேசராஜா அஜந்த், இவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்ஷன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீண்டும் நேற்று மாலை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது  ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் எதிர்வரும் ஜுன் 12ஆம் திகதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X