2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தாயும் மகளும் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம், அபயபுர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி அநுராதபுரம், அபயபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இத்தாயும் மகளும் குத்திக் கொலை செய்யப்பட்டதுடன், 60 வயதான தந்தையும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

60 வயதுடைய பெண் வீட்டின் பின்பகுதியிலும் 23 வயதுடைய பெண் வீட்டின் முன்பக்க நுழைவாயிலுக்கருகிலும் உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த 23 வயதான பெண்ணை, சந்தேக நபர் 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இப்பெண் கடந்த 2 வாரங்களாக வேறொருவருடன் காதல் கொண்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த சந்தேக நபர் இப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தியதுடன், இரவு வேளையில் இவர்களை கத்தியால் குத்தியதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X