2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மஹாவலி கங்கையில் மிதந்த சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மஹாவலி கங்கையில் மிதந்துவந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

கண்டி, வத்துகாமம் வீதியில் நவயாலதென்னை பிரதேச மஹாவலி கங்கையிலேயே  இச்சடலம் மிதந்துவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி 3 அங்குல உயரமுடைய இப்பெண்ணின் சடலம் நீல நிறமும் வெள்ளை நிறமும் கலந்த ஆடை அணிந்தவாறு காணப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இச்சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X