2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கத்திக்குத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்,ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துரைச்சேனைக் கிராமத்தின்  02ஆம் குறுக்கு வீதியிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றது.  

பிறைந்துரைச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த கலந்தர் லெப்பை முகம்மட் அன்வர், அப்துல் ஸலாம் முகம்மட் பௌசர் ஆகிய இருவரே கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து மோதல் இடம்பெற்ற இடத்தில் கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றது. இருப்பினும் இதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார்  கூறினர்.

இந்தக் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடி வருவதாகவும்  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X