2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட முதிரை மரங்கள் கைப்பற்றல்

Kogilavani   / 2013 ஜூன் 08 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகுதி முதிரை மரங்களை கல்குடா பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவை கைப்பற்றப்பட்டதாக இந்நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஆர்.ஏ.மாயாரஞ்சன் தெரிவித்தார்.

இதன்போது லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி மற்றும் மரங்கள் வாழைச்சேனை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு, மகியங்கனை பகுதிகளில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட மரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X