2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வயோதிப பெண் கொலை: சந்தேகத்தில் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 11 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வயோதி பெண்ணை கொலைசெய்துவிட்டு 20 பவுண் நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை ஊரணி பகுதியில் உள்ள வீடொன்றில் 69 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் அவரது கழுத்தில் இருந்த 20 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  நேற்று திங்கட்கிழமை  அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்வந்த பொலிஸார் மேற்படி பெண்ணின் உறவினர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  பொலிஸார் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X