2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தகராறில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 13 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஸ்ரீதரன்
 
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொத்தஸ் வீடமைப்புத் திட்டத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில்  இரும்பு ஆயுதம் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 55 வயதான  மேசன் தொழிலாளியே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேக நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின்  உறவு முறையானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X