2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அபாயாவை அணிந்து தப்ப முயன்ற சந்தேகநபர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்து முஸ்லிம் பெண்ணை போன்று வேடம்;தரித்து தனியார் வாகனம் ஒன்றில் தப்பிச்செல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் இருந்து கல்முனைப் பகுதிக்கு தப்பிச் சென்றுக்கொண்டிருந்த போதே களுவாஞ்சிக்குடியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறைந்துரைச்சேனைப் பகுதியில் கைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபரை பொலிஸார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்து கொண்டு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் தனியார் வாகனம் ஒன்றில் தப்பிச் செல்வதாக பொலிஸாருக்குக் தகவல் கிடைத்துள்ளது.

அந்ததகவல்களின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை ஊர்காவல் படையனியில் நாவலடி, வெலிகந்த போன்ற இராணுவ முகாம்களில் கடமையாற்றி பின்னர் கடமையை விட்டுவிலகியிருந்தார்.

அத்துடன் பிறைந்துரைச்சேனைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X