2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருடியவரும் திருட்டுக்கு உடந்தையானவரும் கைது

Kogilavani   / 2013 ஜூன் 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஞ்சன்

திருட்டுச் செயலில் ஈடுபட்ட சிறுமி ஒருவரும் அவருக்கு உடந்தையாக இருந்த நபரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளனர்.

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட துனுக்கேஉல்ல வனஅப்புவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தரம் 9இல் கல்வி பயின்று வரும் சிறுமி ஒருவரே திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி அவரது உறவினரது வீட்டில் சுமார் 5 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சிறுமியை இவ்வாறு திருட்டுச் செயலில் ஈடுபடுவதற்கு மேற்படி நபர் உடந்தையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதான இருவரும் கம்பளை நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X