2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

வெளிநாட்டுத் தயாரிப்பிலான கைக்குண்டு ஒன்றினை தம்வசம் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். 

மாதம்பை, சுதுவெல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இக்கைக்குண்டுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்புகளை உருக்கி இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு சிலர் தயாராவதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு நேற்று தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விடத்திற்கு மாதம்பை பொலிஸார் சென்ற சமயம் அங்கு  நின்றிருந்த சிலர் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர்.

எனினும் அவர்களுள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த கைக்குண்டும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X