-கனகராசா சரவணன்
அம்பாறை தீகவாவி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு ஒன்றை உடைத்து பணம், கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்ட ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்.
தீகவாவி பாடசாலை சந்தியில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளரை தவிர ஏனையவர்கள் கடந்த 26ஆம் திகதி புதன்கிழமை பொசன் நிகழ்வுக்காக விகாரைக்கு சென்ற நிலையில் இரவு 11.00 மணியளவில் வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை சாத்திவிட்டு பக்கத்து வீட்டில் சம்பாசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்கள் வீட்டினுள் புகுந்து அலூமாரியில் இருந்த 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் கொள்ளையிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது வீட்டின் உரிமையாளர் கொள்ளையரை கண்டுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட இங்குராணை முகங்காவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.