2025 ஜூலை 19, சனிக்கிழமை

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

A.P.Mathan   / 2013 ஜூன் 29 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
புத்தளம், நாகவில்லு பிரதேசத்தில் 800 கிறாம் கஞ்சா வைத்திருந்த பெண்ணொருவரை புத்தளம் பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
 
புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து புத்தளம், நாகவில்லு பிரதேசத்தில் அமைந்துள்ள 38 வயதுடைய குறித்த சந்தேக நபரின் வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது, அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிறாம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா எனவும், சந்தேக நபரிடம் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X