2025 ஜூலை 19, சனிக்கிழமை

வல்லுறவு குற்றச்சாட்டு: சந்தேக நபர் விடுவிடுப்பு

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி அன்று அவரது உறவினர் ஒருவர் பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி, நபர் மீதான குற்றப்பத்திரம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால், கடந்த 2012 ஆகஸ்ட் 23 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிகாரம் மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் சாட்சியங்களும் அளிக்கப்பட்டன.

மேற்படி வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் எஸ். பரமராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை என்றும், எதிரியின் குற்றப்பத்திரத்தில் கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் முரண்பாடுகள் காணப்படுவதனால் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக கருத முடியாத காரணத்தினால் சந்தேக நபரை விடுதலை செய்வதாக அறிவித்து ஆணையாளர் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X