2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாசிக்குடாவில் சடலம் கரையொதுங்கியது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 07 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடற்கரையில் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியைச் சேர்ந்த பிரபல குளிர்பான விற்பனை நிலைய முகவரான செல்லத்துரை மனோகரன் (வயது 64) என்பவரது சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

தனது தந்தையின் சடலமென இவரது மகன் அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக இவரை காணவில்லையென இவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

குறித்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிளொன்றும் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இச்சடலத்தை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X