2025 ஜூலை 19, சனிக்கிழமை

கத்திக் குத்துக்கு இலக்கான பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 10 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கத்திக் குத்துக்கு இலக்கான 38 வயதான பெண்ணொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவீரவௌ பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு இப்பெண் தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக அயல் வீட்டுக்குச் சென்றுவிட்டு அன்றிரவு  9 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது ஒழிந்திருந்த சந்தேக நபர் இப்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

தனது கணவரது நண்பரின் கத்;திக் குத்துக்கே இப்பெண் இலக்கானார்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X