2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழ். மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

103 பவுண் நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர் உட்பட ஏனைய மூவரையும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில், கொக்குவில் பகுதியுள்ள வீடொன்றில் 103 பவுண் நகை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட 4 பேர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டனர்.

மேற்படி நால்வரையும் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட ஏனைய மூவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X