2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருட்டுச் சம்பவத்தில் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூலை 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சுன்னாகத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்.

சுன்னாகம், பெரிய மதவாடி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 3 இலட்சம் பெறுமதியான தாலி கொடி திருட்டபட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை உரியவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இருவரை கைதுசெய்ததுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கைதான இருவரும் தமது குற்றத்தை ஒப்புகொண்டதுடன் மறைத்து வைத்திருந்த தாலிக் கொடியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி இருவரும் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X