2025 ஜூலை 19, சனிக்கிழமை

பஸ் நடத்துனரிடம் பணம் கொள்ளை

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
கண்டியில் இருந்து வத்துகாமம் வரையில் பயணித்த பஸ் வண்டி ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி அளவில் வத்துகாமம் வீதியில் தொரகமுவ சந்தியில் மறித்து அதன் நடத்துனரிடம் இருந்த 35,000 ரூபாய் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக வத்துகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கண்டியில் இருந்து கொழும்புவரை பயணிக்கும் இப் பஸ் வண்டி இறுதியாக வத்துகாமம்வரை சென்றுள்ளது. இரவு ஒன்பது மணி அளவில் வத்துகாமம் தொரகமுவ சந்தியில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் பஸ் வண்டியை வழி மறித்து அதன் நடத்துனரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த 35,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வத்துகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X