2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதையல் தோன்ற முற்பட்டவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வில்பத்து தேசிய வனத்தினுள் சட்டவிரோதமாக  நுழைந்து  பான்பரப்பி பள்ளிவாசல்குளம் எனும் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த வேளையில் கைதுசெய்யப்பட்ட ஏழு நபர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் வேலையுடன் கூடிய ஆறு மாதச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வீதம் 9 இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணை புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய பாரதி விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 23ஆம் திகதி வெசாக் தினத்திற்கு முன்னைய தினம் இவர்கள் வில்பத்து தேசிய வனத்தினுள் நுழைந்து பொன்பரப்பி பள்ளிவாசல்குளம் பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிக்க இடம்ஒன்றில் தோன்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை வில்பத்து வனாந்தரத்தின் வனஜீவி அதிகாரிகள் மற்றும் இராணுவ கமாண்டோ படைப்பிரிவின்  வீரர்களினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக தொல்பொருள் பெறுமதிமிக்க இடம் ஒன்றை சேதப்படுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

சகல குற்றங்கள் தொடர்பிலும் இவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டதன் பின் இவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு இலட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X