2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்திய வியாபரிக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

சுற்றுலா விசாவில் வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் பாசிக்குடாவில்; வைத்து கைதான இந்திய வியாபாரிக்கு இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன் மூன்று தினங்களுக்குள்  நாட்டை விட்டு வெளியேறுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த சங்காரப் பிள்ளை ராஜகோபால் என்பவர் பாசிக்குடா பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று (புதன்கிழமை) மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை விசாரனை செய்த வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூஸைன் சந்தேக நபர் தனக்கு வழங்கப்பட்ட விசாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டதுடன்; மூன்று தினங்களுக்குள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று விட வேண்டும் என்றும் தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X