2025 ஜூலை 19, சனிக்கிழமை

தரகரை கடத்தி தங்கமோதிரம் அபகரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.ரம்ஸீன் 

கம்பளையில் தரகர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதுடன், அவரிடமிருந்து தங்கமோதிரத்தையும் பணத்தையும் மூவர் அபகரித்துச் சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டியை சேர்ந்த தரகர் ஒருவரே இவ்வாறான அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை அம்புலுவாவ பகுதி காட்டிலிருந்து  இவரை பொதுமக்கள் காப்பாற்றி ஹெம்மாதகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்தத் தரகரின் கையடக்கத் தொலைபேசிக்கு கிடைத்த அழைப்பைத் தொடர்ந்து  இவர் கம்பளை நகருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், கம்பளை நகரில் தரகரின் வருகைக்காக காத்திருந்த  சந்தேக நபர்கள் மூவரும் அம்புலுவை, வத்தேகட இடத்திற்கு கொடுக்கல், வாங்கல் ஒன்றுக்காக தரகரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அடர்ந்த காட்டினுள் தரகரை அழைத்துச் சென்று தாக்கியதுடன்,  அவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தையும் பணத்தையும் அபகரித்துக்; கொண்டு சந்தேக நபர்கள் மூவரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இது தொடர்பான விசாரணை  கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயவீரவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X