2025 ஜூலை 19, சனிக்கிழமை

பணம் திருட முற்பட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகத்திலுள்ள கோவிலொன்றிலுள்ள உண்டியலிலிருந்து பணம் திருடுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

சுன்னாகம் நகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள  வைரவர் கோவிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

இக்கோவில் உண்டியலினுள் இருவர்  மாறி மாறி ஏதோவொன்றை உள்ளே விடுவதும் அதனை எடுப்பதுமாக இருந்ததுடன், சில வேளைகளில் உண்டியலிலிருந்த பணம் வெளி வருவதையும் அங்கிருந்த பெண்ணொருவர் கண்டுள்ளார்.

இது தொடர்பில் அப்பெண்; ஏனையோர்களிடம் தெரியப்படுத்தியதை கண்ட இரு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ளனர். இவர்களை துரத்திச்சென்ற இளைஞர்கள் இவர்கள் இருவரையும் பிடித்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரிடம் இளைஞர்கள் விசாரித்தபோது, தென்னம் ஈர்க்கில் சுவிங்கத்தை ஒட்டி உண்டியலிலிருந்து பணம் எடுக்க முன்வந்த விடயம் தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபர்கள் இருவரும் கிராம அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட்டு கிராம அலுவலர் மூலமாக  சுன்னாகம் பொலிஸில் இச்சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X